தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

இன்று மார்ச் 04 ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதனால் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 84,225 அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த இரண்டு பேரும், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 104 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 63 பேரும், இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 133 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 80,599 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 79,043பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 10,786 பி.சி.ஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 417 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,437ஆக உயர்வடைந்துள்ளது. 

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 3,304 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 95 தனிமைப்படுத்தல்மையங்களில் சுமார் 9,903 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 484 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.