தேசிய கொடி விவகாரம்; இலங்கையின் அவசர தகவல் - உடனடியாக பதில் கொடுத்தது சீனா.

இலங்கையின் தேசிய கொடியினை கால் துடைக்கும் துடைப்பான்கள், பாதணிகளில் அச்சிட்டு விற்பனை செய்வது தொடர்பில் கடுமையான ஆட்சேபனையை அரசாங்கம் வெளியிட்டிருந்து நிலையில் அதற்கு சீனா உடனடியாக பதில் வழங்கியுள்ளது.

அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் தரைவிரிப்பை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சீனாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை உடன் தொடர்பு கொள்ளுமாறு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்திருந்தார்.

அத்துடன், கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கும் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சீன தூதரகம்,

“தேசிய கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இதே போன்ற தயாரிப்புகளை அமேசானில் பல்வேறு நாடுகளின் விற்பனையாளர்கள் விற்கிறார்கள்.

எவ்வாறாயினும், பல தசாப்தங்களாக இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்திற்காக சீனா ஆதரவளித்து வருகின்றது என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.