பெரும் சவாலுக்குள் இலங்கை! அச்சம் வெளியிட்டார் அமைச்சர் வாசுதேவ

புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பகுதியளவேனும் குறைக்கப்படாவிட்டால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவார்கள் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளது.

சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டதன் காரணமாக சந்தையில் சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான கேள்வி அதிகளவில் காணப்பட்டாலும் உள்ளுர் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளார்கள்.

கடந்த ஒக்டோபர் மாதமளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறைக்கப்பட்டன.

இதன்போது சீனிக்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது. இதனையே எதிர்தரப்பினர் தற்போது சீனி மோசடி என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்திற்கு காணப்படும் பிரதான சவாலாக உள்ளது. இவ்விடயம் குறித்து வர்த்தகத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.