முஸ்லிம்களின் அனைத்து மத்ராஸாக்களும் தடைசெய்யப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.மரிக்கார் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனினும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான வகையில் செயற்படும் 5 தொடக்கம் 16 வயது வரையானோருக்கு மதம் மற்றும் அராபியை கற்பிக்கும் மதராஸாக்கள் தடை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம் சமுதாயமும் நிறுவனங்களும் மதராஸாக்களை தடைசெய்ய அனுமதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கற்பிக்கும் மதராஸாக்கள் தடைசெய்யப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment