அமைச்சர் விமலை நீக்காவிட்டால் ஆபத்து! ஆளும் கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி

அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்தின் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்த அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 44 பேர் அமைச்சர் விமல்வீரவன்சவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமைச்சரின் அறிக்கைகள் சில அரசாங்கத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என, நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித் பண்டார இதன்போது தெரிவித்துள்ளார்.

தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த அமைச்சர் விமல்வீரவன்சவின் உரைகளை காண்பித்துள்ள அவர், பசில் ராஜபக்சவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

2006 இல் அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீர, அனுரா பண்டார நாயக்க, ஸ்ரீபதி சூரியாராச்சி போன்றவர்களை வெளியேற்றியது போன்று விமல்வீரவன்ச, உதயகம்மன்பில ஆகியோரை நீக்காவிட்டால் அரசாங்கத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.