சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

சமூக ஊடகங்களில் ட்ரென்ட் ஆகி வரும் விடயங்களுக்காக சுற்றாடல் குறித்து பதிவிடாது மெய்யாகவே சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு சமூக ஊடகப் பயனர்கள் முயற்சிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளார்.

கதிர்காமத்தில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நதிகளைப் பாதுகாப்போம் நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் சுற்றுச் சூழல் அழிவு குறித்து சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து வருவதனை தாம் அவதானிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெறும் பாரியளவிலான சுற்றுச் சூழல் அழிவுகளுக்கு தாம் மட்டுமே பொறுப்பு என்ற வகைகயில் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை வளங்கள் அழிப்பதற்கோ நதிகளை மாசுபடுத்துவதற்கோ தாம் அனுசரணை வழங்கியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசுமையான சூழலை கடந்த காலங்களில் உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரும் தங்களது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட்டால் சுற்றுச் சூழலை பாதுகாப்பது அவ்வளவு கனடிமான விடயமன்று என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.