மொனறாகலை பதுளை பிரதான வீதி பசறை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
லுனுகலை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று பசறை 13ம் கட்டை பகுதியில் வீதியை விட்டு விலகி 200 அடிபள்ளத்தில் வீழ்ந்ததில் இன்று காலை 6.55 அளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் மூவர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுள் 14 பேரின் சடலங்கள் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்றதையடுத்து பொலிஸார் இராணும் மற்றும் பொதுமக்கள் இணைந்து காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் சம்பவத்தின் பின்னர் குறித்த பகுதியில் சுமார் 3 மணித்தியாலங்கள் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் லுனுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகணை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment