அரச மரம் வேரோடு சரிந்து வீழ்ந்தால்; வாகனங்களுக்கு சேதம் - மலையகத்தில் சம்பவம்.

பதுளை , கிங்ஸ் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் இருந்த அரச மரம் இன்று (10) பிற்பகல் பெய்த கடும் மழையில் வேரோடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள், இரண்டு லொறிகள்,ஒரு கெப் ரக வண்டி, ஒரு முச்சக்கர வண்டி என்பன கடுமையாக சேதமடைந்துள்ளன.

அரச மரம் முறிந்து வீழ்ந்த சமயம் பயணித்த மோட்டார் வண்டி ஒட்டுநர் காயங்களுக்கு உள்ளாகி மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்ட வசமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். மின்கம்பம் ஒன்று சேதமடைந்தால் பதுளை நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பதுளை தீயணைக்கும் படையணியிலுள்ள வீரர்களும், பதுளை பொலிஸாரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.