நாட்டில் எரிபாருள் தட்டுப்பாடு ஏற்படுமா? - வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் எரிபாருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சமடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது 20 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எம்வசம் உள்ளது. அதனால் அச்சமடையத் தேவையில்லை. சுயெஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் சிக்கியுள்ளதன் காரணமாதக எரிபொருள் விலை அதிகரிக்ககூடும் என கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. எமது நாட்டிற்கு பெற்றுக்கொள்ளும் எரிபொருட்களில் நூற்றுக்கு 65 வீதமானவை இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன. ஏனைய 35 வீதம் சவுதி அரேபிய உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறப்படுகின்றன. குறித்த நாடுகள் சுயெஸ் கால்வாயின் கீழுள்ள நாடுகள் என்பதனால் எமது நாட்டிற்கு பாரிய பாதிப்பு எவையும் இல்லை. எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.