சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர் அமைதியான முறையில் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில், நாளை மறுதினம் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில், பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், பரீட்சை மத்திய நிலையத்திலோ அல்லது குறித்த வளாகத்திலோ அமைதியற்ற முறையில் செயற்படுவோரின் பரீட்சை முடிவுகள் செல்லுபடியற்றதாக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பரீட்சைகள் சட்டத்துக்கு அமைய, பரீட்சார்த்திகளினால் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டால், கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் என, பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பரீட்சை நிலையங்களில் இடம்பெறக்கூடிய இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.