மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலத்தை அல்லது அதிலுள்ள குழப்பகரமான விடயங்களை அகற்றி விரைவில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.

தற்போது மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகள் இயங்கி வருவதாகவும் இது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்,

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் கர்தினாலின் அங்கீகாரத்துடனேயே முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்,

அரசாங்கம் இந்த அறிக்கையை மறைக்க முற்படுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ள போதிலும் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமான தகவல்கள் தவிர ஏனைய தகவல்கள் அனைத்தும் மக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்,

மேலும் ஜெனிவாவில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையை நாட்டிற்காகவே மீளப் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்,

எவ்வாறாயினும் இது தொடர்பில் யாரும் பேசுவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.