புர்கா தடை விவகாரம்: பாகிஸ்தான் தூதுவர், வெளிவிவகார அமைச்சருடன் அவசர சந்திப்பு.

புர்கா மற்றும் நிகாப் ஆகிவற்றுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் Saad Khattak பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படுவதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் நேற்றுமுன்தினம்(15) அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இது ஊடகங்களில் பேசு பொருளாகக் காணப்பட்டது. இந்த நிலையிலேயே, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று(16) செவ்வாய்க்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, புர்கா மற்றும் நிகாபிற்கு தடை விதிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அண்மைய இலங்கை விஜயத்தின் வெளிப்பாடாக மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.