கொழும்பு டேம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொழும்பு டேம் வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னரே தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டன.

இதற்கமைய, குறித்த சடலம் குறுவிட்ட தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுடையது என மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் D.H.L.W. ஜயமான்னவினால் வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகளுக்கமைய, குறித்த பெண்ணின் மரபணு மாதிரி அவரது தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகளுடன் ஒத்துபோகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, கொலை செய்யப்பட்டதன் பின்னரே தலை துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துண்டிக்கப்பட்ட குறித்த பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பெண்ணின் சடலம் கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், பயணப்பை ஒன்றிலிருந்து கடந்த முதலாம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கடந்த 2ஆம் திகதி மொனராகலை படல்கும்புற பகுதியில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.