அரிசி விலை தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் விடுத்த முக்கிய அறிவிப்பு..!

சதோச நிறுவனங்களில், முக்கிய அரிசி வகைகளின் விலைகள் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சதோச நிறுவனத்தின் ஊடாக, எந்தவித பற்றாக்குறையும் இன்றி, ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவுக்கு மேற்படாத வகையில் தொடர்ந்தும் வழங்கவுள்ளோம். எந்தவொரு நிலைமை ஏற்பட்டாலும் சதோச நிறுவனத்தின் ஊடாக ஒரு கிலோகிராம் நாடு மற்றும் சம்பா அரிசி என்பன 100 ரூபாவுக்கு மேலாக விற்பனை செய்யப்பட மாட்டாது. இதன்படி நுகர்வோருக்காக பல்வேறு மாற்றுத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுவது என்பதில் சிந்திக்கத் தேவையில்லை. 100 ரூபாவுக்கு குறைவாகவே ஒரு கிலோகிராம் அரிசி சதோச ஊடாக விநியோகிக்கப்படும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.