சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சரின் மற்றுமொரு அறிவிப்பு

நிறைவடைந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சை பெபேறுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாராதர சாதாரண தர பரீட்சையானது, மார்ச் முதலாம் திகதி முதல் இன்று (10) வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட க.பொ.த. சாதாரணத்தர பரீட்சைக்கு 6,22, 000பேர் தோற்யிருந்தனர். பரீட்சைக்கு தோற்றியவர்களில் 56 பேர் கொரோனா தொற்று காரணமாக, 40 விசேட மத்திய நிலையங்களில் பரீட்சை எழுதியிருந்துடன் தனிமைப்படுத்தப்பட்ட 322 பேர் பரீட்சை மத்திய நிலையத்தில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபங்களில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இந்த நிலையிலேயே கபொ. சாதாரணத்தர பரீட்சையின் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்த கல்வி அமைச்சர், “க.பொ.த. உயர் தரப் பிரிவுக்கு தகுதிபெறும்மாணவர்கள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் சேர்க்கப்படுவார்கள். அதற்குரிய நடவடிக்கைகளை மிகவும் விரைவாக எமது அமைச்சு எடுக்கும்” என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.