இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா விடுத்துள்ள வேண்டுகோள்.

கறுப்பு ஞாயிறு அமைதிப் போராட்டத்தில் சகல முஸ்லிம்களையும் இணையுமாறு முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா வேண்டுகோள்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் 'கறுப்பு ஞாயிறு'அமைதிப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

21 ஏப்ரல் 2019 அன்று நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமாக பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்கள் விடுத்துள்ள அழைப்பை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா (MCSL)ஆதரிக்கிறது. 7 மார்ச் 2021 அன்று பேராயரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ள அமைதிவழிப் போராட்டத்தில் இணையுமாறு சகல முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா வேண்டுகோள் விடுக்கிறது. 

தேவாலயங்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி கிறிஸ்தவர்கள் மீதும் ஹோட்டல்களில் தங்கியிருந்த ஏனையவர்கள் மீதும் பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் பின்னால் எந்தவித இஸ்லாமிய காரணிகளும் இல்லை என்பதையும்யுத்த முனைகளில் கூட அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை இஸ்லாம் தடுத்துள்ளது என்பதையும் முஸ்லிம் கவுன்சில் மீண்டும் வலியுறுத்துகிறது.

தற்கொலைக் குண்டுதாரிகள் சகல விதமான இஸ்லாமிய விதிமுறைகளையும் மீறியுள்ளனர். இதன் காரணமாகவே அவர்களுக்குரிய இஸ்லாமிய இறுதிக் கிரியைகள் மறுக்கப்பட்டன. 

இப் பயங்கரவாத்தாக்குதலை திட்டமிடுவதற்கும் முன்னெடுப்பதற்கும் பொறுப்பாகவிருந்தவர்களை கண்டறிந்து நீதியின் முன்நிறுத்துமாறும் அதற்கென உடனடியானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் சகல இலங்கையர்களுடனும் இணைந்து முஸ்லிம் சமூகமும் கோரிக்கை விடுக்கிறது. 

என்.எம். அமீன்
தலைவர்
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா (MCSL)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.