பட்டப் பகலில் நடுக் கொழும்பில் பெட்டிக்குள் கிடக்கும் சடலம்; பொலிஸார் பல கோணங்களிலும் விசாரணை!

கொழும்பு, டாம் வீதி பகுதியில், பயணப் பொதி ஒன்றில் வைக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், கறுப்பு நிற பயணப் பை ஒன்று மிக நீண்ட நேரமாக காணப்படுவதாக, இன்று (01) பிற்பகல் 2.30 மணியளவில் டாம் வீதி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதவான் விசாரணை மற்றும், பிரேதப் பரிசோதனை ஆகியவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த சடலம் யாருடையது, சம்பவத்திற்கான காரணம் என்ன, என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் டாம் வீதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்காக, குறித்த பகுதியில் உள்ள CCTV காட்சி ஆதாரங்களை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.