நாட்டில் கொரோனா நிலவரம்: இன்றும் 8 சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 85, 000 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று சனிக்கிழமை இரண்டாவது நாளாக கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று மாலை 6 மணி வரை 190 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 85, 150 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 81,769 பேர் குணமடைந்துள்ளதோடு, 2,888 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மரணங்களின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின.

அடால பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவர் கண்டி பொதுவைத்தியசாலையில் கடந்த 5 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரக பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 8ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 ஆம் திகதி கொவிட் நிமோனியா , தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10ஐ சேர்ந்த 81 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 ஆம் திகதி உயர் இரத்த அழுத்தம் , தீவிர நீரழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

இராஜகிரியவை சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 ஆம் திகதி சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் தொற்று என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.