கொழும்பு நோக்கி சென்ற பஸ் கோர விபத்து - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

மூன்றாவது இணைப்பு

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் இன்று காலை 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 46 ஆகவும் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

இரண்டாவது இணைப்பு

பதுளை - பசறை வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சுமார் 30 பேர் காயமடைந்த நிலையில் பதுளை மற்றும் பசறை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாவது இணைப்பு

மொனராகலை - பதுளை வீதியின் பஸ்ஸர 13 ஆம் தூண் பிரதேசத்தில் பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

லுணுகலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.