264,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்

கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ள 1.44 மில்லியன் தடுப்பூசிகளின் முதலாவது அங்கமான 264,000 அஸ்ரஸெனிக்கா தடுப்பூசிகள் யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனிசெப் ஆகியவற்றின் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிகள் எமிரேட்ஸ் விமானத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்தியாவின் மும்பையில் உள்ள சீரம் மருந்து தொழிற்சாலையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.

குறித்த தடுப்பூசிகள் இந்தியாவின் மும்பையில் இருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 12.15 மணியளவில் கொண்டுவரப்பட்டது.
குறித்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டபின் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,

கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையால் பெறப்பட்ட தடுப்பூசிகளின் முதல் தொகுதி இதுவாகும். 264,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஸெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் உள்ளன.

உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை நம் நாட்டிற்காக இவற்றைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்த தடுப்பூசிகள் நாளை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின்னர் உலக சுகாதார அமைப்புக்கு இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன் பின்னர் கோவெக்ஸ் திட்டத்தால் வழங்கப்படும் இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக்கொள்ளும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், சுகாதார அமைச்சு மற்றும் கொவெக்ஸ் வசதி ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கமைய 1.44 மில்லியன் தடுப்பூசிகள் யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு மே மாதம் வரை கட்டம் கட்டமாக கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ வழியாக 264,000 கொவாக்ஸ் தடுப்பூசிகள் யுனிசெப் மூலம் வழங்கப்படுகிறது. 

அத்தோடு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமானது சுகாதார அமைச்சுடன் இணைந்து தடுப்பூசி வழங்கலுக்கான தயார்படுத்தல், தடுப்பூசி வழங்கலை அமுலாக்குதல் மற்றும் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு அமைவாக வழங்கல்கள், விநியோக நிர்வாகம், அபாய நிலைமைகள் தொடர்பான தொடர்பாடல், தடுப்பூசிக்கான கேள்வியை அதிகரித்தல் என்பவற்றிற்கான ஆதரவை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.