பாராளுமன்றம் அமர்வு ஆரம்பமானது; சற்றுநேரத்தில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான அறிக்கை மீதான விவாதம்

பாராளுமன்ற அமர்வு இன்று (10) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகிவுள்ளது. 

உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21 ) தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது பாராளுமன்றத்தில் இன்று (10) ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் மூன்று நாள் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், முதல் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

ஏனைய 2 நாள் விவாதங்களையும் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 5.30 வரையில் குறித்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.