இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; 20 வீடுகள் தீக்கிரை

மஸ்கெலியா – குயின்ஸ்லேன்ட் பிரிவிலுள்ள 20 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதியொன்றில தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் இதானால் 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் ஈடுபட்டனர். 

இந்த தீ பரவலினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மஸ்கெலிய மற்றும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா – ராகலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியிருந்ததுடன், முழு குடியிருப்பும் தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.