1000 ரூபா சம்பள அதிகரிப்பு : வெளியானது அதி விசேட வர்த்தமானி.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சின் செயலாளர் M P D U K மாபா பத்திரணவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளின் அடிப்படையில், தேயிலைப் பயிர்ச்செய்கை மற்றும் உற்பத்திக் கைத்தொழில் பற்றிய சம்பளச் சபையினால் நிறைவேற்றப்பட்டு, தொழில் அமைச்சரினால் இதற்கான தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பள அளவு 900 ரூபாவாகவும், வரவு செலவுத் திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவுமாக, மொத்த நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறப்பர் நடுதல் மற்றும் பொது இறப்பர் உற்பத்திக் கைத்தொழில் பற்றிய சம்பளச் சபையினால், இறப்பர் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமும் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பள உயர்வு மார்ச் 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.