10 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதம் - விபரம் வெளியானது.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னணி பெளத்த தேரர்கள் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர உழைத்த பெங்கமுவே நாலக்க தேரர், முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட தேரர்கள் இவ்வாறு கடிதத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.

இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அரசாங்கம் நடக்கக்கூடாது எனவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பின் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.