பாகிஸ்தான் பிரதமரை சந்தித்தனர் முஸ்லிம் MPக்கள்; ஜனாசா எரிப்பு உள்ளிட்ட நெருக்கடிகள் எடுத்துரைப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று 24.02.2021) மாலை கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஹலீம், ஹாபிஸ் நஸீர் அஹமட், தௌபீக், ஹரீஸ், அலி சப்ரி ரஹீம், முஷாரப், இஷாக் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், ஹலீம், உட்பட முஸ்லிம் எம்.பிக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பிலும், அதனால் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மனக்கவலைகள் குறித்தும் அவர்கள் பிரதமர் இம்ரானிடம் எடுத்துரைத்தனர். அத்துடன், முஸ்லிம் சமூகத்தின் சமகால நெருக்குதல்கள் குறித்தும் அவர்கள் பிரதமர் இம்ரான் கானுக்கு தெளிவுபடுத்தினர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.