இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(24) பகல் 2 மணிக்கு அவரது விடுதியில் சந்திப்பதற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சந்திப்பின்போது பலவந்த ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் சமூகத்துக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க பிரார்த்திப்போம் எனவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment