ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுவதை இடைநிறுத்துமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொரோயா ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனு எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Post a Comment