முன்னாள் ஜனாதிபதியின் அதிரடி திட்டம்..!

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு சிறிலங்கா சுதந்திர கட்சியினை முழுமையாக மறுசீரமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எங்கள் செய்தி குழுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

கடந்த பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் போது நாட்டின் மக்கள் சிறிலங்கா சுதந்திர கட்சியை நாட்டின் தீர்க்கமான அரசியல் சக்தியாக மாற்றினர் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்படி, மாவட்ட ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் சிறிலங்கா சுதந்திர கட்சியினை வளர்ச்சியடைய செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தேசிய வளங்களையும் பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்பதன் மூலம் சிறிலங்கா சுதந்திர கட்சி தனது வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நாட்டைப் பாதுகாத்து மேம்படுத்தி வருவதாகவும், அந்தக் கொள்கையின் அடிப்படையில் அவர் தொடர்ந்து கட்சியை வழிநடத்துவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டுகிறார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.