சாதரணதர பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான பயிற்சிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் இரண்டினை அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுதராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்திகளின் தேர்வு அட்டையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சார்திகளின் தேர்வு அட்டையில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் திணைக்களத்தின் இணையத்தளம் அவற்றை மேற்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.