மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களின் விசேட கவனத்திற்கு; சட்டமா அதிபரின் அதிரடி உத்தரவு.

முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாமென சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசங்களை அணிவது தொடர்பில் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிடார் ஜெனரல் பாரிந்த ரணசிங்க, முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசங்களை அணிவது தொடர்பில் வழங்கப்பட்ட விதிமுறைகள் செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

அத்துடன், இவ்வாறு பயணிக்கும் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாமென சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசங்களை அணிந்து பயணித்தவர்கள் மீது கடந்த காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் மீளப் பெறுமாறும் சட்டமா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதி சொலிசிஸ்டர் நாயகம் பாரிந்த ரணசிங்க நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய, மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு மீளப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.