ஹிஜாப் மற்றும் ஹபாயாக்களும் தடை செய்யப்படுமா? நீதியமைச்சர் அலி சப்ரி வெளியிட்டுள்ள செய்தி.

கேள்வி: முற்றாக முகத்தை மறைக்கும் புர்காவை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக கூறியிருந்தீர்கள். முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்க முயல்வதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே.?

பதில்: கடந்த அரசில் நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற தெரிவுக் குழு பாதுகாப்புடன் தொடர்புள்ள பலடவிடயங்கள் தொடர்பில் பரிந்துரை செய்திருந்தது. அவற்றை எந்தெந்த அமைச்சுக்களின் ஊடாக முன்னெடுப்பது என ஆராயப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முகத்தை முற்றாக மறைக்கும் புர்காவை தடை செய்வது தொடர்பிலும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதனை அமுல்படுத்தும் பொறுப்பு நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைத் தான் எனது அமைச்சு செய்கிறது.

கேள்வி: பாதுகாப்புக் காரணத்திற்காக புர்காவை தடை செய்வதாக கூறப்படுகிறது. ஆனால் முகத்தை மறைப்பது தற்போதைய கொரோனா நிலைமையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் முரண்பட்டதாக இல்லையா?

பதில்: தொற்று நோய் போன்ற நிலைமைகளில் அதற்கு இடமளிப்பது தொடர்பான சில சரத்துகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் தொடர்பிலும் பிரச்சினை இருக்கிறது. அதுவும் தடை செய்யப்படுகிறது.

கேள்வி: முஸ்லிம் பெண்கள் அணியும் ஏனைய ஹபாயா, ஹிஜாப் என்பவற்றுக்கும் பாதிப்பு வரலாம் என்ற அச்சம் காணப்படுகிறதே?

பதில்: ஹிஜாப், ஹபாயா என்பவற்றுக்கு எந்த தடையும் பாதிப்பும் வராது. அவற்றுக்கு அனுமதி இருக்கும் வகையிலே மாற்றங்கள் செய்யப்படும். முற்றாக முகத்தை மூடுவதற்கு தான் தடை வரும்.

கேள்வி:கறுப்பு நிறத்தில் அணிவது தொடர்பிலும் விமர்சனம் இருக்கிறதே? 

பதில்: ஒவ்வொருவரினதும் விருப்பத்திற்கு அமைய நிறத்தை முடிவு செய்யலாம். அதில் நாம் தலையிட மாட்டோம். ஆனால் இன்று கறுப்பு ஆடை அணிவதும் முற்றாக முகத்தை மூடும் புர்கா அணிவதும் பெரிதும் குறைந்துள்ளமை வரவேற்கத்தக்கது. அவர்களாக விரும்பி மாறியுள்ளனர். ஒரு வீதமானவர்களின் செயற்பாட்டினால் முழு சமுகத்திற்கும் பாதிப்பு வர இடமளிக்கக் கூடாது.

நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் - ஊடகவியலாளர் ஷம்ஸ் பாஹிம் மேற்கொண்ட நேர்காணலில் இருந்து ஒரு பகுதி. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.