கல்வி அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கும் க.பொ.த சாதாரண பரப் பரீட்சை முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கல்வி அமைச்சர், ஜூன் மாதத்தில் முடிவுகள் வெளியான பின்னர் ஜூலை மாதம் உயர் தர வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்

இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு 22,305 பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இப்பரீட்சை 4513 மையங்களில் பரீட்சை நடைபெறும்.

இதற்கிடையில், கோவிட் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு சிறப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை அனுமதி அட்டை பெறாத தனியார் பரீட்சார்த்திகள் வலைத்தளத்தைப் பார்வையிட்டு அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், அனுமதி அட்டைகளில் சிறிய மாற்றங்களைச் செய்ய விரும்பும் பரீட்சார்த்திகள் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இதுபோன்ற மாற்றங்களைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.