ஜனாஸா எரிப்பு விவகாரம் - இலங்கை வரும் இம்ரான் கானுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் சடலங்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படும் விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் பிரதமர் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, சர்வதேச மன்னிப்புச் சபை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்கின்றமைக்கு எதிராக, நாடாளுமன்ற உரையில் அழுத்த பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவினர், சடலங்களை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என பரிந்துரை முன்வைத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இதுவரை இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை என மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான தீர்மானம், இலங்கை முஸ்லிம் மக்களை பாரிய மன உளைச்சலுக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சடலங்களை கட்டாயம் தகனம் செய்கின்றமையானது, மனித உரிமை மீறல் செயற்பாடாகும் என ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும், மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், கட்டாய தகனமானது, உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான விடயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாசாக்கள் தகனம் செய்யப்படும் விவகாரத்தில், அதிக கவனஞ் செலுத்துமாறும், இந்த விடயத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் செயற்படுமாறும், சர்வதேச மன்னிப்புச் சபை இம்ரான் கானை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்ில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.