புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முடக்கப்போவதில்லை ஆனால் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று சுகாதாரத் துறையினருடன் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் புதிய வகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வைரஸ் பரவல் அடையாளம் காணப்படுவதற்கு முன்னரே சில போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், புதிய வைரசினால் பாதிக்கப்பட்ட பெருமளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
பெருமளவானவர்கள் கலந்துகொள்ளும் திருமணங்கள் ஏனைய நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் இது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment