மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை முதல் மலையகத்தில் அடையாள வேலைநிறுத்தப்போராட்டமும், கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் விடுக்கப்பட்ட குறித்த போராட்டத்துக்கு இதர தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாமல், ஊதிய உயர்வுக்கான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
அத்துடன், மலையகத்திலுள்ள பிரதான நகரங்களும் மூடப்பட்டுள்ளன.
Post a Comment