மலையக அரசியல் கட்சிகளை இந்தியாவே இயக்குகின்றது என்று பாஹியங்கல ஆனந்த தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"இலங்கையிலும் பாரதிய ஜனதாக்கட்சி மலரும், அக்கட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இது வைரஸைை விடவும் மோசமானதாகும். நாட்டுக்குள் விட்டால் நிலைமை சிக்கலாகிவிடும்.
பெருந்தோட்டப் பகுதி அரசியலை இந்தியாவே தீர்மானிக்கின்றது. அங்குள்ள கட்சிகளை இயக்குகின்றது. அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் பாரதிய ஜனதாக்கட்சி இங்கு வந்து வடக்கு, மலையகம் வாக்குகளைப்பெற்று அரசியல் நடத்தினால் இலங்கை, இந்தியாவின் காலனித்துவ பகுதியாக மாறும் அபாயமும் இருக்கின்றது.” – என்றார்.
Post a Comment