எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபா என்ற உத்தரவாத விலைக்கு விற்பனை செய்யப்படும் என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல் அறுவடை இடம்பெறும் மாவட்டங்களில் உத்தரவாத விலையின் கீழ், நெல் கொள்வனவு செய்யப்படுகிறது.
விவசாயிகளுக்கு உரமானியமும் வழங்கப்படுகிறது.
நெல்லை கொள்வனவு செய்வதற்கென அரசாங்கம் 23 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
வரலாற்றில் நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட மிகக் கூடுதலான தொகை இதுவாகும் என்றும் விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment