நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிப்பு.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 14ஆம் திகதி வரை குறுகிய கால (17 நாட்கள்) வழங்கப்படவிருக்கிறது.

இதுபற்றி கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா மாகாண பிரதம செயலாளர்கள் தொடக்கம் அதிபர்கள் வரை சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020க்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெறவிருப்பதே இவ்விடுமுறைக்கான காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் 1ம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எனவே பரிட்சைக்காக விடுமுறை வழங்கப்பட்டு சகல பாடசாலைகளும் மீண்டும் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.