ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்த உத்தரவு

நீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணனி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

“பயிர் செய்கையை விரிவுபடுத்த அதிக நிலம் தேவை. எனவே, விவசாயத்திற்கு பொருத்தமான நிலங்களை விரைவாக அடையாளம் காண வேண்டும்.

விளைச்சலை அதிகரிக்க காணிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதும் முக்கியமானதாகும். இந்த நோக்கத்திற்காக, நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த விவசாயிகளுக்கு உதவுங்கள் ”என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சமூகத்தின் மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100,000 பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தொழில் பெறுவோர்களுக்கு ஒரு துறையில் மட்டும் வரையறுக்கப்படாத பல்நோக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழ்மையான குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

நேற்று(27) முற்பகல் திருகோணமலை மாவட்டத்தில், கோமரன்கடவல பிரதேச செயலக பிரிவின் கிவுலேகடவல கிராம சேவகர் பிரிவில் உள்ள கிவுலேகடவல வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” 12வது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றுவதற்காக கிவுலேகடவல பாடசாலைக்கு செல்லும் வழியில் பாதையின் இரு புறங்களிலும் கூடியிருந்த மக்களிடம் பிரதேசத்தின் விபரங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.

அருகிலிருந்த சில வீடுகளில் இருந்த மக்களுடனும் உரையாடிய ஜனாதிபதி இம்முறை போகத்தின் போது நெல் விளைச்சல் குறித்தும் கேட்டறிந்தார். கிலோவொன்றுக்கு 50 ரூபா குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாத ஈரலிப்பான நெல்லை 43ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி விவசாயிகளிடம் தெரிவித்தார்.

தங்களது நெல் அறுவடையை அரசாங்கத்திற்கோ அல்லது கொள்வனவு செய்யும் எந்தவொரு தரப்பினருக்கும் தங்களது விருப்பத்தின் பேரில் விற்பனை செய்ய முடியும் என்றும், அரசாங்கம் அதற்கு எவ்வித நிபந்தனையையும் விதிக்க வில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

'கிராமத்துடன் உரையாடல்' திட்டம் ஆரம்பமாவதற்கு முன்பு, எஸ்.எல்.டி மொபிடெல் நிறுவனமும் பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் பாடசாலை சேவைகள் இராஜாங்க அமைச்சும் இணைந்து கிவுலேகடவல பாடசாலையில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையைத் திறந்து வைத்து, டயலொக் நிறுவனம் வழங்கிய தொலைக்காட்சி தொகுதி மற்றும் இணைப்பை ஜனாதிபதி பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

கந்தளாய் கம்தலாவ மகா வித்யாலயத்தின் மாணவர் சதுர மதுமால் வடிவமைத்தகாலணிகளில் பொருத்தப்பட்ட நடக்கும் போது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் புதிய கண்டுபிடிப்பை ஜனாதிபதி பார்வையிட்டார்.

'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் தான் பங்கேற்கும் அனைத்து பகுதிகளிலும் பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

'அறிவுப் பலம் கொண்ட சிறுவர் தலைமுறை' என்ற தலைப்பில் ஜனாதிபதியால் பாடசாலைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒரு பாடசாலைக்கு பல்வேறு பாடங்களுக்குரிய 500 புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் கோமரங்கடவல மக்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையாகும். கிராமவாசிகள் முன்பு பயங்கரவாத அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.