மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸார் மற்றும் ராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்விபயிலும் 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குடுப்பத்தகராறு காரணமாக குறித்த மாணவி நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment