வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிவும் ஜனாஸா விடயத்தில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய முடியும் என நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது

இந்த நிலையில் சடலங்களை தகனம் மற்றும் புதைத்தல் தொடர்பான புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் குறித்து நாளை(27) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் வௌியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் சில பாகங்களில் கொரோனாவால் உயிரிழந்து எதுவும் செய்யப்படாமல் இருக்கும் சடலங்களை உறவினர்கள் வர்த்தமானியை காரணம் காட்டி அடக்கம் செய்ய முயற்சிக்கும் போது வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள போதிலும் எப்படி அடக்கம் செய்வது எங்கு அடக்கம் செய்வது என்று தமக்கு சுற்றுநிரூபம் கிடைக்கவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.