நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 343 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்தே இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 3 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த 2 ஆம் திகதி தனது இல்லத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன் நாவல பகுதியை சேர்ந்த 89 வயதுடைய ஆணோருவரும், மட்டக்குளி பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண்னொருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, பொஹவந்தலாவ பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், குருதி விசமடைதல் மற்றும் சிறுநீரக நோய் ஆகியவற்றின் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 729 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment