மலையகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலஅதிர்வு குறித்த வெளியான செய்தி.

பதுளை − மடூல்சீமை − எக்கிரிய பகுதியில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று (12) அதிகாலை 4:52 அளவில் பதிவாகியதாக புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியகம் தெரிவிக்கின்றது.

இந்த நிலஅதிர்வு ஒரு ரிக்டருக்கும் குறைவான அளவிலேயே பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார்.

குறித்த பகுதிக்கு அண்மித்த இடங்களில் இதற்கு முன்னரும் இருவேறு சந்தர்ப்பங்களில் நிலஅதிர்வுகள் பதிவாகியிருந்தன.

இதேவேளை, கண்டி − திகண பகுதியை அண்மித்த இடங்களிலும் அண்மை காலமாக நிலஅதிர்வுகள் பதிவாகியிருந்தன.

மலையக பகுதிகளில் அண்மை காலமாக சிறு நிலஅதிர்வுகள் அதிகரித்து வருவதை காண முடிகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.