ஜனாஸாக்களை அடக்கம் செய்ய எப்போது வாய்ப்பு வழங்கப்படும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள செய்தி.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காக வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதிக்கச் சுகாதார அமைச்சின் விசேட குழு நேற்று பிற்பகல் கூடிய போது தயாரித்துள்ளது.

தான் உட்பட நிபுணர் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்து வழிகாட்டியைத் தயாரித்ததாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடக்கம் செய்வதற்கான இடத்தை உறுதிசெய்த பின்னர், கொரோனா செயலணிக்கு சமர்ப்பித்து, அதற்கு அனுமதி பெற்ற பின்னர் அது சுற்றறிக்கையாக வெளியிடப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

குறித்த வழிகாட்டி வழங்கப்பட்ட பின்னரே கொரோனா தொற்றால் மர ணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப் படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

உடல்களை அடக்கம் செய்யும் வரை அது குளிரூட்டி பெட்டிகளில் வைக் கப்படும் என்று விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.