கொவிட்-19 தொற்றுக்கு எதிரான ஒக்ஸ்போட் எஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பொது மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அதிக பாதிப்புடைய தரப்பினர் மற்றும் பொது மக்களுடன் நெருங்கி பழகக்கூடியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது முன்னுரிமை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment