கொத்து ரொட்டியை தயாரிப்பது போல் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது – நீதியமைச்சர்

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற வரையறை குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், முன்நோக்கி செல்லும் போது அவசியமற்ற சட்டங்கள் இருந்தால் அவற்றை நீக்க தயார் எனவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

கொத்து ரொட்டியை தயாரிப்பது போல் உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது எனவும், இது குறித்து சமூகத்திற்கு விளக்கப்பட்டு கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், சகல இனங்களின் உதவியுடன் சிறந்த நாட்டை உருவாக்க அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அனைத்து தரப்பினரின் ஆதரவு அவசியம். சட்டத்தை மாத்திரமல்ல, அதனை செயற்படுத்துவதில் துரிதம், இலகு மற்றும் குறைந்த செலவு முறையும் அவசியம்.

சட்டத்தின் ஆதிபத்தியம் தொடர்பாக பிரஜைகளின் நம்பிக்கையை அத்தியாவசியமானது எனவும் நீதியமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே நீதியமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.