விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அனுமதி வழங்கப்படுவது போலவே, ஏதேனும் நிலைமை தொடர்பாக, மீண்டும் விசேட நிபுணர் குழு யோசனையை கொடுத்தால், அந்த அனுமதியை ரத்துச் செய்யவும் பின்வாங்க மாட்டோம்.
எந்த ஒருவராலும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் விடுக்கும் இயலுமை எவருக்கும் இல்லை அரசாங்கம் எடுக்கும் விசேட நிபுணர்கள் எடுக்கும் தீர்மானத்தை எவராலும் மாற்ற முடியாது.
Post a Comment