நாடு மீண்டும் முடக்கப்படுமா? – இராணுவ தளபதி சற்றுமுன் விடுத்த செய்தி

நாட்டில் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் மீண்டும் முடக்க செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல்வேறு பாகங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் பரவியுள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்று கொழும்பு பியகம வவுனியா அவிஸ்ஸாவலை ஆகிய பகுதிகளில் பரவியுள்ளமை கடந்தவாரம் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.