இளைஞர் யுவதிகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் விடுத்த முக்கிய அறிவித்தல்

பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன் னிட்டு இணையதளங்களில் மோசடி இடம் பெறவுள்ளதாகத் தவல் வெளியாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத் துள்ளார்.

எனவே , இது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத் துள்ளார்.

அத்துடன் சுகாதார ஆலோசனைகளை மீறி காதலர் தின களியாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பவர் களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் காதலர் தினம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் அனுமதியின்றி களியாட்டங்கள் மற்றும் விருந்து பசாரங்களை முன்னெடுப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.