மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5941 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அதன்படி இதுவரை 4407 பேர் பதிவாகியுள்ளனர். அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் 727 தொற்றாளர்களும் , மாத்தளை மாவட்டத்தில் 807 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளன.
நேற்று(16) தினம் மாகாணத்திற்குள் மொத்தம் 77 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. அதன்படி கண்டியிலிருந்து 66, பேரும் நுவரெலியாவிலிருந்து 04 மாத்தளைலிருந்து 07 பேரும் புதிய தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
மேலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே கொரோனா தொற்று காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கண்டிமாவட்டத்தில் இதுவரை 38 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 08 பேரும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் ஐவருமாக மொத்தம் 51 பேர் உயிரந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் நோய் காரணமாக கண்டி மாவட்டத்தில் எட்டு இடங்களில் கொவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.
Post a Comment